Vinayagar Chaturthi : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் 250 பேருந்துகள் விடப்படுவதாக பொது மேலாளர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுபமுகூர்த்த தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் வார இறுதி நாள்களான 15.09.2023 மற்றும் 16.09.2023 அன்று மக்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள்.
இதனால், அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 250 சிறப்பு பேருந்துகள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மேற்படி விடுமுறையை முடித்து பொது மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 18.09.2023 அன்று கூடுதலாக 250 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“