ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய கல்லூரி பேராசிரியர்களில் 25 பேர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த மாதம் நடந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்றன. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அரசு பல முயற்சிகளை எடுத்தும் எதுவும் கை கொடுக்கவில்லை.
பிறகு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தலைமைச் செயலகம் சார்பில் 31-ம் தேதி வரை, அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனால் 30-ம் தேதியில் இருந்தே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்.
இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 5000 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் 25 கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர் பணியல்லாத மற்ற ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 27 பேர் மீண்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 மீதான இடை நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.