New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/kerala.jpg)
27 மாணவர்களையும் கைது செய்து புழல் சிறைக்கு அனுப்பி வைத்த காவல்துறை
27 students were arrested and sent to jail : திருவள்ளூர் மாவட்டம் மேல்மனம்பேடு பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் தங்கராஜ். அவருடைய சகோதரர் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்தார். முன் விரோதத்தின் காரணமாக அவர்கள் முறையே 2016 மற்றும் 2018 (செப்டம்பர்) ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ராஜேஷின் உறவினரான விமல் சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் 6 பேர் நேற்று முன்தினம் (15/10/2019) சாட்சி சொல்ல நீதிமன்றம் சென்றுள்ளார். விமல் தன்னுடைய நண்பர்கள் 30 பேரை அழைத்து சென்ற ராஜேஷின் உறவினர் சாட்சிகளை சுற்றி வளைத்து நின்று சாட்சிகளை அச்சுறுத்த முயன்றுள்ளனர்.
சாட்சி சொல்ல வந்த கஜேந்திரன் இதை காவல்துறையினரிடம் கூற, அந்த மாணவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தியது. 30 மாணவர்களில் 27 மாணவர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். இந்த மாணவர்கள் ஏன் தேவையில்லாமல் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்தனர் என்று காவல்துறை விசாரணை செய்தது. பின்பு அவர்கள் அனைவரையும் ரிமாண்ட் செய்து புழல் சிறைக்கு அனுப்பியது காவல்துறை. இந்த மாணவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற விமல் மட்டும் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.