ஜே.இ.இ., (அட்வான்ஸ்டு) தேர்வில் பங்கேற்க தகுதி பெற்ற 274 அரசுப்பள்ளி மாணவர்களை, 45 நாட்களுக்கு குடியிருப்புப் பயிற்சி திட்டத்தில் ஈடுபடுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
இந்த தொடக்க விழாவில், அமைச்சர் அம்பில் மகேஷ் கூறியதாவது, "இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இருந்து 3,600 மாணவர்கள் ஜே.இ.இ., (முதன்மை) தேர்வெழுதினர். அவர்களில் 274 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு குடியிருப்புப் பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் என்ஐடி மற்றும் ஐஐடியில் படிக்க உதவுவதே எங்கள் நோக்கம்" என்று அன்பில் மகேஷ் கூறினார்.
சேதாப்பேட்டை பள்ளியில் உள்ள இரண்டு விடுதிகளில் மாணவர்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆண்டு 696 மாணவர்கள் ஜே.இ.இ., (முதன்மை) தேர்வெழுதினர், அவர்களில் 168 பேர் ஜே.இ.இ., (அட்வான்ஸ்டு) தேர்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட குடியிருப்புப் பயிற்சி திட்டத்தின் காரணமாக 20 மாணவர்கள் என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி.,-மெட்ராஸில் சேர்ந்தனர்.
மொடக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான தனுசியா, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி.,யில் சேர விரும்புவதாக கூறினார். "சுய படிப்பின் மூலம் நான் JEE (முதன்மை) இல் 82% பெற்றேன்", என்று அவர் கூறினார்.
ஐ.ஐ.டி.,யில் சேர்வது என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாத ஒன்று என்றும், கோச்சிங் அளிக்கும் திட்டம் ஆனது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil