சென்னையில் காவலரை தாக்கிய வழக்கில் 28 புலம்பெயர் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் 28 புலம்பெயர் தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 23ம் தேதி, புலம்பெயர் தொழிலாளர்கள் மது போதையில் மோதிக்கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் அவசர எண்ணுக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவலர்களான ரகுபதி மற்றும் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டைகளைக் கொண்டு காவலர்களை தாக்கியதுடன், இருச்சகர வாகனங்களையும் தொழிலாளர்கள் சேதப்படுத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ரகுபதி என்ற காவலர் காயமடைந்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆவடி காவல் ஆணையர் கே. சங்கர் கூறுகையில் “ காவல்துறையினருக்கு எதிராக வன்முறையை கண்டுகொள்ளாமல் பொருத்துக்கொள்ள மாட்டோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் இரவில் சோதனை நடத்திய காவலர்கள், வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து 28 பேரை கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“