29 year old Chennai man arrested for making a bomb threat call : சென்னையைச் சேர்ந்த நசுருதீன் என்பவர் சொந்தமாக பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய நிறுவனத்தில் வேலைபார்த்த ஜமீனா (a) ரஃபியா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
அந்த பெண் தற்போது உங்கள் வளைகுடா நாடு ஒன்றில் வேலை செய்ய திட்டமிட்டு 8ஆம் தேதி இந்தியாவிலிருந்து அங்கு செல்ல திட்டமிட்டார். அவரின் இந்த செயல் கணவர் நஸ்ருதீனுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது மனைவி வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்க வேண்டும் என்று யோசனை செய்திருக்கிறார்.
29 year old Chennai man arrested for making a bomb threat call
மிகவும் அதிகமாக யோசனை செய்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கண்ட்ரோல் ரூமுக்கு கால் செய்து சென்னையை சேர்ந்த ஜமீனா என்ற பெண் துபாய் அல்லது அபுதாபியில் தற்கொலை தாக்குதலை நடத்த உள்ளார் என்றும், அவர் சென்னையிலிருந்து தான் கிளம்புகிறார் என்றும் போன் செய்து எச்சரிக்கை செய்துள்ளார்.
சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக இருந்த நேரத்தில் இப்படி கால் செய்துள்ளார் இவர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு எச்சரிக்கை செய்த டெல்லி சர்வதேச விமான நிலையம் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரணை செய்து வந்தது. போன் செய்த அந்த ஆசாமி யார் என்று அறிந்த டெல்லி காவல்துறை, கூர்கானின் பாவானா என்ற பகுதியில் அவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட விசாரணை நடத்தும் போது அவர் பெயர் நசுருதீன் என்றும், அவருக்கு வயது 29 என்றும், இந்த காரணத்தினால் தான் போன் செய்தார் என்றும் கூறியுள்ளார். அவரை குறித்த தகவல்களை நேற்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளது டெல்லி போலீஸ்.