scorecardresearch

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமல்: படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Fishing ban
Fishing ban

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் இன்று (ஏப்ரல் 15) முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. ஏனாம் கடலின் முகத்துவாரத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வங்க கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் இக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தாண்டும் இன்று ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 2month fishing ban along tn pudhucherry coast

Best of Express