/indian-express-tamil/media/media_files/eumjJ5JwECmFZksU65uQ.jpg)
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 3 செயலிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
Tamil Nadu | நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான சில நிகழ்ச்சிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடை முறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வ தைக் கண்காணித்தல், அரசு செல வினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களை தீட்டுதல், அர சின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைப்பேசி செயலி, தமிழ் நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைப்பேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டது.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைபேசிப் செயலி (Mobile App) அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக் கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள், மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைப்பேசி செயலி தொடங்கிவைக்கப்பட்டது.
சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநர்களின் அலுவலக பயன் பாட்டிற்காகவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலு வலரின் பயன்பாட்டிற்காகவும் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று மகேந்திரா பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.