சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூ.2.19 கோடி மதிப்பிலான 3.73கிலோ அளவிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை விமான நிலையத்தில் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடைமைகளை மத்திய சிறப்பு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
-
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்
அப்போது விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (34), கோவையை சேர்ந்த பிரியா(36) மற்றும் ஶ்ரீமதி (29) ஆகியோரை ஆய்வு செய்த போது, உள்ளாடைகள், மற்றும் மலக்குடலில் தங்க நகைகள், தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ரூ.2.19 கோடி மதிப்பிலான சுமார் 3.73 கிலோ தங்கங்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/