சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது.
இங்கு இன்று (அக்.24) காலை மூன்று சிறுவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற மின்சார ரயில் சிறுவர்கள் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே மூன்று சிறுவர்களும் உயிரிழந்தனர். வண்டலூர் ரயில் நிலையம் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்தச் சிறுவர்கள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். உயிரிழந்த ரவி (12) சுரேஷ் (15), ஆகியோர் கர்நாடகத்தில் தங்கி இருந்து படித்து வந்தனர்.
தற்போது பள்ளி விடுமுறையில் பெற்றோரை காண்பதற்காக சென்னை வந்துள்ளனர். இதில் சுரேஷ் ரவி ஆகியோர் அண்ணன்-தம்பி ஆவார்கள்.
மஞ்சுநாத் நண்பர் ஆவார். இந்த 3 சிறுவர்களும் மாற்றுத்திறனாளி ஆவார்கள். இதில் மஞ்சுநாத்துக்கு வாய்பேச முடியாது.
ரவி மற்றும் சுரேஷ் ஆகியோர் செவித்திறன் குறைபாடு கொண்டவர்கள் ஆவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“