தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது.
இந்த மழையால் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோயிலின் மேற்கு கோபுரத்தில் 2ஆம் அடுக்கில் இருந்த 2 துவாரக பாலகர் சிலைகளும், மற்றொரு சிலையில் உள்ள இடது கால் பகுதியும் இடிந்து விழுந்தன.
அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிலர் சிலை விழுந்ததை பார்த்து தெரிவித்ததையடுத்து பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே தகவல் அறிந்து வந்த கோயில் பொது தீட்சிதர்கள் உடைந்த சிலைகளை பார்வையிட்டனர். கீழே விழுந்த சிலைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கோயில் மேற்கு சன்னதி வாயிலை பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் அடைத்தனர்.
சிலைகள் சேதமானதால் ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள் நடத்தவும், நீதிமன்ற உத்தரவு பெற்று புதிய சிலைகள் அமைக்கவும் பொதுதீட்சிதர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“