கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கனிம வளம் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அதிகாரிகளை உஷார்படுத்தினார். தொடர்ந்து, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராம், வடசேரி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அப்போது 3 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மூன்று லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால்.குமரியில் ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ் சாலைகள் பாதிக்கப்பட்டு சேதம் அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“