3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை...

கடவுளின் அனுகிரகம் இல்லாமல் எதுவும் நடக்காது என பலரும் தெரிவிப்பதற்கு ஏற்றார் போல் நடந்துள்ளது 300 டன் எடை கொண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு.

vishnu statue, vishnu statue, விஷ்ணு சிலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கோரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையை வெட்டி 64 அடி, 300 டன் எடை உள்ள விஷ்ணுவின் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, பெங்களூரூவில் இருக்கும் கோதண்டராமசாமி டிரஸ்டிற்கு சொந்தமான கோவிலுக்காக உருவாக்கியுள்ளனர்.

பிரம்மாண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு

இந்த சிலையை கோரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூரூவிற்கு கொண்டு சேர்க்க 50 நாட்கள் அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 240 டயர்கள் கொண்ட பெரிய லாரியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  மும்பையைச் சேர்ந்த ரேஷாம்சிங் குழுமத்தின் 30 பேர் கொண்ட குழுவினர் சிலையை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

vishnu statue, vishnu statue, விஷ்ணு சிலை

பின்னர் பெரும்பாடுப்பட்டு, இயந்திரங்கள் வைத்து லாரியின் மேல் சிலையை வைத்தனர். அதனை எடுத்துச் செல்ல அந்த லாரி குவாரியை விட்டு லாரி நகரத் தொடங்கியது. ஆனால் எவ்வளவு போராடியும், 3 நாட்களில் வெரும் 300 மீட்டரே நகர முடிந்தது. அதற்குள் சில டயர்கள் வெடித்து பழுதானது. அவற்றை மாற்றி மீண்டும் இந்த லாரி அகர தொடங்கியுள்ளது.

vishnu statue, vishnu statue, விஷ்ணு சிலை

இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிலை ஒதுக்கப்பட்டிருக்கும் 50 நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கிற்கு சென்றடையும் என்று தெரிவித்தார். இவர், சிலை இருக்கும் இடத்தை அவ்வப்போது ஆய்வு செய்து, பணிகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.

vishnu statue, vishnu statue, விஷ்ணு சிலை

 

சிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 500 மீ நகர்ந்து, தெல்லூர் – தேசூர் சாலைக்கு சென்று விட்டால், அதன் பிறகு சீரான வேகத்தில் கொண்டு சென்று விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close