கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடித்த இலங்கை கடற்படை… கவனத்தில் கொள்ளுமா இந்திய அரசாங்கம்?

வலைகளை பறித்துக் கொண்டு மீனவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் !

Tamil Nadu weather, Chennai weather, Northeast Monsoon Forecast
Tamil Nadu weather, Chennai weather, Northeast Monsoon Forecast

தமிழக மீனவர்கள் கைது : ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீன்வர்கள் நேற்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். 700 விசைப்படகுகளில் சென்ற 3000 மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் விரட்டியடித்துள்ளனர். மேலும் மீனவர்கள் வைத்திருந்த வலைகளை அறுத்து, மீனவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இது குறித்து இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் அசோசியேசனின் தலைவர் பி. சேசுராஜ் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து பேசியுள்ளார். அதில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்களை மிரட்டி.

வலையை வாங்கிவைத்துக் கொண்டு, கல்லெறிந்து தாக்குதல்கள் நடத்தினார்கள். இதனால் மீனவர்கள் மீன்கள் எதையும் பிடிக்காமலே கரை திரும்பினார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது

இந்த பிரச்சனைகள் குறித்து பேசுகையில் 1974ம் ஆண்டு ஒப்பந்தப்படி எங்களுக்கும் அந்த தீவில் மீன்பிடிக்க உரிமையுண்டு என்று அவர் கூறியிருக்கிறார்.  ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 மீனவர்களை எல்லை தாண்டி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது இலங்கை அரசு.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 3000 indian fishermen from tamil nadu were chased away by the sri lankan navy

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com