காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்து உள்ள பரந்தூரில், சென்னையின் 2-வது பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
இந்த விமான நிலைய கட்டுமானத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கில்பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4,791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன.
பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் விமான நிலையம் கட்டப்படவுள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 100 மில்லியன் விமான பயணிகளை கையாளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
மேலும், ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து விமான நிலையம் அமைக்கப்படுவதை சுட்டிகாட்டும் வகையில் ஏகனாபுரத்தில் உள்ள வயல்ஏரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil