தெற்கு ஆசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வண்ணம், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் கார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசுக்கும் நிசான் நிறுவனத்திற்கும் இடையே ரூ.3,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது.
எம்.ஆர்.சி., நகரில் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் உடன் தொழில் துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றிருக்கிறார்கள்.
ஓரகடத்தில் இயங்கி வருகின்ற ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, இதன்மூலம் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கத்திற்கான பணி உடனடியாக துவங்கப்பட்டு, வருகின்ற 2025ஆம் ஆண்டில் மின்சார வாகனத்தை நிசான் நிறுவனம் முதன்முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறது.