ஐந்து கோவில்களில் உள்ள 360 கிலோ தங்கம் உருக்கப்பட்டு, ரூ.4 கோடி வருவாய் ஈட்டும்படி மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள், ஓய்வு, பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். மாலா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்களை நீக்கி, பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி, பாரத் ஸ்டேட் வங்கியின் , 2015ம் திட்டத்தின் கீழ் தங்க பாத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 168 கிலோ 68 கிராம் 889 மில்லி கிராம் எடையுள்ள சுத்த தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 99 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 472 ரூபாய் ஆகும். மேற்படி தங்க மதீப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25% ஆகும். அதன் மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான 2.25 கோடி ரூபாய் இத்திருக்கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தங்க முதலீட்டு பத்திரத்தினை, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செப்.4 திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள்முருகனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மாலா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“