தமிழ்நாடு அரசு, 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திடீரென பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பல்வேறு அதிகாரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
நிர்வாக வசதி மற்றும் மேம்பாட்டிற்காக 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தலைமைச் செயலக வட்டாரத்தில் சில முக்கிய துறையின் செயலாளர்கள் மாற்றப்படக் கூடும் என தகவல் பரவி வந்தது.
அதனடிப்படையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளராக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹு, கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/09/QC6qQVuo62uRVSPUlSOK.jpeg)
மேலும், தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த மணிவாசன் ஐ.ஏ.எஸ்., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/09/1mXv1D8HXScyn4P9L2ht.jpeg)
சந்திர மோகன் ஐ.ஏ.எஸ், அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மருத்துவத் துறை செயலாளராக செந்தில் குமாரும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை செயலாளராக சுப்ரியா சாஹுவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை செயலாளராக மதுமதி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/09/xDtmDewLyoiPNkFgSncy.jpeg)
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக பொதுத்துறை இணை செயலாளர் பவன்குமார் கிரியபனவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/09/i8OYYzdluSPzYMaBcOyA.jpeg)
தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.