தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உளளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக அபய் குமார் சிங்க்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு சென்னை ஐ.ஜி.,யாக ராதிகாவும், குற்றப் பிரிவு சிஐடியாக அன்புவும், சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) லோகநாதனும், சைபர் கிரைம் சென்னை எஸ்பியாக கீதாஞ்சலியும், பொருளாதார தடுப்பு பிரிவு வடக்கு மண்டலம் அதிகாரியாக பொன் கார்த்திக் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கண்ட்ரோல் ரூம் எஸ்பியாக விஜய கார்த்திக் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்ற பின்னர் இந்த பணியிட மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“