தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு | தமிழ்நாட்டில், வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.4.60ல் இருந்து ரூ.4.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹6.15ல் இருந்து ₹6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆகவும், 601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆகவும், 801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“