Advertisment

உயிர்களை பறிக்கும் செல்பி மோகம் - மக்கள் திருந்துவது எப்போது

செல்பியால் மட்டும் 2011 முதல் 2017 வரை உலகம் முழுவதும் 259 பேர் இறந்துள்ளதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pambaru dam Selfie - 4 members die

pambaru dam Selfie - 4 members die

புதிதாய் திருமணமான தம்பதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் நான்கு பேர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பம்பாறு அணையை சுற்றிபார்க்க சென்றுள்ளனர். அப்போது, செல்பியால் நான்கு நபர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கிறது.

Advertisment

ஆறு பேரும் இடுப்பு ஆழம் வரையுள்ள  நீரில் நின்று கொண்டிருந்தபோது செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்திருக்கின்றனர். இதில், பிரபு என்பவர் மட்டும் தண்ணீரை ஒட்டியவாறு கரையோரமாய் இருந்திருக்கின்னார் . அதில், ஒருவர் எதிர்பாராத விதமாக தண்ணீரின் வேகம் தாங்காமல் தவறிய போது, மற்ற நான்கு பேருக்கும் அழுத்தும் கொடுத்திருக்கிறார். எனவே, பிரபுவைத்  தவிரத்து மற்ற ஐவரும் தண்ணீரின் வேகத்துக்குள் மாட்டியிருக்கின்றனர். பிரபு எவ்வளவோ முயற்சி செய்தும், யுவராணி என்ற பெண்ணைத் தவிர மற்ற நால்வரையும் காப்பாற்ற முடியவில்லை. எனவே,  இச்சம்பவத்தில் பிரபு, யுவராணி என்பவரைத் தவிர்த்து கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா என்ற நால்வரும் பரிதாபாமாக உயிர் இழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மீட்கப்பட்ட நால்வரையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மேற்படி விசாரணையையும் தொடங்கினர்.

செல்பியால் மட்டும் 2011 முதல் 2017 வரை உலகம் முழுவதும் 259 பேர் இறந்துள்ளதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krishnagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment