கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இசை கச்சேரி குழுவினர் 12 பேர் , நேற்று (மே 11) திருச்செந்தூர் மாவட்டதில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலை அங்கிருந்து சுமோ வாகனத்தில் வீடு திரும்பினர்.
இந்நிலையில், காலை திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளமடம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது இவர்கள் வந்த சுமோ வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஓட்டுனர் உள்பட 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சஜிதா, அனாமிகா, எட்வின், நிதிஷ் சஜின், விக்னேஷ் , அருந்தியா ஆகிய 8 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமோ வாகனத்தின் ஓட்டுனர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அரசு பேருந்து மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சாலையின் குறுக்கே இருக்கும் வேகத்தடை மேடுகளில் வெள்ளை வண்ணம் பூசாத நிலையும் இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“