4 tigers found dead in last 7 days at Tamil Nadu, Kerala forest boundaries : உலகெங்கும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. சில ஆராய்ச்சி முடிவுகள், இந்நோய் மனிதர்களை கடந்து விலங்குகளுக்கும் பரவும் என்றும் அறிவித்திருந்தது. அமெரிக்காவில் நாடியா என்ற புலிக்கு அதன் காப்பாளர் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது போன்ற சூழலில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 1 புலியும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிகளும் கேரளாவின் வயநாடு பகுதியில் குறிச்சியாட் பகுதியில் 1 புலியும் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், 9ம் தேதி அன்று, 10 வயது மதிக்கத்தக்க இரண்டு புலிகள் (1 ஆண் மற்றும் 1 பெண்) உயிரிழந்தன. இந்நிலையில் நீலகிரியின் மசினக்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவரல்லா ஓடை அருகே புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் அந்த புலிக்கு உடற்கூறாஆய்வு செய்யப்பட்டது. இந்த புலி இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், அழுகிய நிலையில் தான் மீட்கப்பட்டது. அதன் பாலினம் கண்டறிய முடியாமல் இருந்தது. உடற்கூறாய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
அந்த 5 வயது புலி பின்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக கேரள எல்லைக்குள் புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil