சென்னை கோயம்பேட்டில் உணவு பாதுகாப்புத் துறை மண்டல அதிகாரி டாக்டர் சதீஷ்குமாரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், இந்தச் சோதனையானது அதிகாலை முதலே நடத்தப்பட்டது.
100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்தச் சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், 3 டன் வாழைப் பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனையின் போது உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டுபிடிப்பது எப்படி?
செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான நிறத்தைக் கொண்டிருப்பதோடு, இயற்கையாகப் பழுத்ததை விட மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். பழுக்க வைக்கும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் காரணமாக அவை சற்று பளபளப்பான தோற்றத்தைக் கொண்டிருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“