கோவை கல்லூரியில் சுவர் இடிந்து விபத்து: 4 தொழிலாளிகள் உடல் நசுங்கி பலி

கோவை கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
4 workers crushed to death in Coimbatore college wall collapse accident

கோவை கல்லூரி விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார்.

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் தனியார் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

Advertisment

இதனிடையே கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே அமைந்துள்ள பகுதியில் காம்பவுண்டு சுவர் ஒன்று உள்ளது இது கருங்கல்லால் ஆனது என கூறப்படுகின்றது.

இந்த சுவர் சுமார் 30 அடி நீளம் உள்ளது. உயரம் 5 அடி அளவில் உள்ளது. இந்த காம்பவுண்ட் சுவர் ஒட்டியே புதிய காம்பவுண்ட் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இதற்காக இந்த கருங்கலில் ஆன சுவரை ஒட்டி அஸ்திவாரத்திற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பணிபுரிந்து வந்திருந்தனர்.

இதனிடையே நேற்று மாலை 5:30 மணி அளவில் காம்பவுண்டின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கல்கள் இடிந்து அனைத்தும் கீழே விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் ஐந்து பேரும் சிக்கினார்கள். இதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Advertisment
Advertisements

ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (53), நக்கிலா சட்யம் (48), ரப்பாகா கண்னையா(49) மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிஸ் கோஸ் உயிரிழந்தனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த வருன் கோஸ் உயிருடன் மீட்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.

சம்பவ இடத்திற்கு கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டார்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: