Advertisment

மார்ச் முதல் வாரம்.. தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் ராணுவம்!

மக்களவை தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 40 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகின்றனர். இந்தத் தகவலை சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Delta Districts, ParaMilitary Force, TK Rangarajan, Thirumurugan Gandhi Opposes

மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுக்கு 40 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகின்றனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu Lok Sabha Elections 2024 Date: 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற உள்ளூர் கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை முயன்றுவருகின்றன.

தற்போது வெளியான தகவலின்படி தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடத்தப்படலாம்.

Advertisment

மேலும், மாநிலங்களிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளில் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அதாவது, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 32 தொகுதிகள் பொதுத்தொகுதிகள் ஆகும். மீதமுள்ள 7 தனித்தொகுதிகள் ஆகும்.

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “மார்ச் முதல் வாரத்தில் 40 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகின்றனர்” என்றார்.

அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, துணை ராணுவப் படை தமிழ்நாடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment