ஜெயலலிதா மறைவுக்கு பின்பு 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அதிமுக நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
சபாநாயகர் அப்பாவு நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது முக்கிய தகவல் ஒன்றை கூறினார். ” ஜெயலலிதா மறைந்த போது அதிமுக பல பிரிவுகள் ஆகியது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்த காரணத்தால் நீக்கப்பட்டார்கள். டிடிவி தினகரன் அப்போது திகார் சிறையில் இருந்தார். தினகரன் சிறை சென்ற காலையில், நண்பர் ஒருவர் என்னை அழைத்து பேசினார். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் அழைத்து வந்துவிடுகிறேன் என்று . இது தொடர்பாக நான் அவசரமாக ஸ்டாலிடம் பேசினேன். ஆனால் அவர் இந்த 40 பேரை நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் தேவையில்லை. நாம் மக்களை சந்திப்போம்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் சபாநாயகர் பேசிய கருத்தை 48 மணி நேரத்தில் திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அதிமுக செய்தி தொடர்பாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“