scorecardresearch

தலைமறைவாக இருந்த 9 மாவட்டங்களைச் சேர்ந்த 40 ரவுடிகள் கைது

ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும். கட்ட பஞ்சாயத்து. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைமறைவாக இருந்த 9 மாவட்டங்களைச் சேர்ந்த 40 ரவுடிகள் கைது

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை) கடந்த 01.03.2023-ம் தேதி முதல் 07.03.23-ம் தேதி வரை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதுள்ள நீதிமன்ற பிடிகட்டளைகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மேற்கண்ட சிறப்பு தேடுதல் வேட்டையில் மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1313 நீதிமன்ற பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவற்றில் திருச்சி மாவட்டத்தில் 77 பிடிவாரண்ட், புதுக்கோட்டையில் 122 பிடிவாரண்ட், கரூர் மாவட்டத்தில் 48-ம், பெரம்பலூரில் 50 பிடிவாரண்ட்டும், அரியலூர் மாவட்டத்தில் 266 பிடிவாரண்ட், தஞ்சாவூர் மாவட்டத்தில் 308 பிடிவாரண்ட், திருவாரூர் மாவட்டத்தில் 303 பிடிவாரண்ட், நாகப்பட்டிணத்தில் 37-ம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 102 பிடிவாரண்ட் நிறைவேற்றப்பட்டுள்ளன.

செக் மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் மீதுள்ள 102 நீதிமன்ற பிடிவாரண்ட்களும் விடுவிக்கப்பட கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நீதிமன்ற பிடிவாரண்ட்களும் இச்சிறப்பு தேடுதல் வேட்டையின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பாக இச்சிறப்பு தேடுதல் வேட்டையில் 40 ரவுடிகளின் மீது இருந்த பிடிவாரண்ட் நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் இந்த 7 நாட்களில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கொலை POCSO வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி  மாதத்தில் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுபடுத்த எடுக்கப்ட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும். கட்ட பஞ்சாயத்து. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்,  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 40 rowdy from 9 districts arrested

Best of Express