scorecardresearch

அரசு விரைவு பஸ்களில் 400 தனியார் டிரைவர்கள்: ஒப்பந்த நிறுவனம் மூலமாக நியமிக்க முடிவு

தமிழகத்தில் 400 ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

express news

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், பேருந்துகளை இயக்குவதற்காக 400 ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (செட்சி) முடிவு செய்துள்ளது.

அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஒப்பந்த ஓட்டுநர்களை தேர்வு செய்ய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செயல்படுகிறது.

நிரந்தரப் பணியாளர்கள் ஆட்சேர்ப்புக்கு அதிக நேரமும், கூடுதல் செலவும் (வருங்கால நிதி மற்றும் பிற பலன்கள்) வருவதால், பெரும் நிதி நெருக்கடியை போக்குவரத்து கழகங்கள் சந்தித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

இதனால், ஒப்பந்தப் பணியாளர்களை பெற ஆறு மாதங்களுக்கு முன்பே அரசிடம் போக்குவரத்து கழகம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 400 contract bus drivers in tamil nadu setc

Best of Express