Advertisment

மருத்துவம் படிக்க 40,288 பேர் விண்ணப்பம்; ஜன. 3வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

author-image
WebDesk
New Update
40288 applications received for MBBS admissions

40288 applications received for MBBS admissions : மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணபிக்க 07/01/2022 இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை வரை 40 ஆயிரத்து 288 மாணவர்கள் மருத்துவம் படிக்க, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Advertisment

இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று வட்டாரங்கள் அறிவிக்கின்றன. மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியில் ஜனவரி 3ம் வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 6958 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்ய டிசம்பர் 19ம் தேதி முதல் கல்ந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பெறும் பணி துவங்கியது. தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. புதிதாக திறக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் 1450 இடங்கள் உள்ளன.

15% அனைத்திந்திய மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீட்டிற்கு செல்ல மீதம் 4277 எம்.பி.பி.எஸ்,. இடங்களும், 175 பல் மருத்துவம் படிப்பதற்கான இடங்களும் உள்ளன. இவை மட்டுமின்றி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தமாக 1925 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களும் உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவுற்றது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 25,511பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 மாணவ மாணவியர்களும் விண்ணப்பித்துள்ளனர். 2019-20 கல்வி ஆண்டில் 35,016 பேர் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தனர். 2020-21 கல்வி ஆண்டில் 39,223 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு கடந்த இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகப்படியான மாணவர்கள் மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு இரண்டு வாரங்களில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் வசந்தாமணி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment