/indian-express-tamil/media/media_files/2025/09/30/vijay-video-2025-09-30-15-48-19.jpg)
கரூர் துயரம்: 41 பேர் பலி; முதல்முறையாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட விஜய்!
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டநெரிசல் இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட த.வெ.க. நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்
கருர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக வீடியோ வழியே பேசிய நடிகர் விஜய், என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. கரூரில் த.வெ.க எந்த தவறும் செய்யவில்லை. தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். சி. எம். சார். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகத் தொடரும். என்னுடைய வலிகளை நீங்க புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நின்று பேசிவிட்டு வந்ததை தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், கட்சி நிர்வாகிகள் மீதும் சோஷியல் மீடியா நண்பர்கள் மீதும் எப்.ஐ.ஆர். (FIR) போட்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து எனக்கு சொல்வதுபோல் இருந்தது. சீக்கிரம் அனைத்து உண்மைகளும் வெளிவரும். பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. அத்தனை பேர் இறந்து கிடக்கும் போது எப்படி விட்டுட்டு போக முடியும்?.. அப்படி நான் அங்க போனா அதை காரணம் காட்டி, வேறு சில அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக கரூர் செல்லவில்லை.
கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன்தான். என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும்?.. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன். இவ்வாறு அதில் விஜய் தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.