திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 பேருக்கு கொரோனா பாதித்தது எப்படி?
Triplicane V R Pillai Street containment Zone : அவர்கள் இரண்டு பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் மூலம் இந்த தெரு மக்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
Triplicane V R Pillai Street containment Zone : அவர்கள் இரண்டு பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் மூலம் இந்த தெரு மக்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
42 Covid-19 cases from V R Pillai Street at Triplicane : தமிழகத்தில் நேற்று மேலும் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
நேற்று, சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளையார் தெருவில் இருந்து மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த 20 பேரில், 12 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. குடுமபத்தில் 18 வயது இளைஞர் முதல் 65 வயது முதியவர் வரை என அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கடந்த நான்கு நாட்களில் 42 மக்களுக்கு கொரோனா தொற்று பதிவு செய்ததன் மூலம் வி.ஆர் பிள்ளையார் தெரு கொரோனா க்ளஸ்டராக உருவெடுத்துள்ளது. இந்த குறிப்பிட்டத் தெரு சென்னை கார்ப்பரேஷனின் மண்டலம் 9 (தேனாம்பேட்டை)கீழ் வருவதாக சென்னை மாநகராட்சி குறிப்பிடுகிறது. இதுவரை இந்த மண்டலத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . திரு வி கா நகர் (மண்டலம் 6) ராயபுரம் (மண்டலம் 5) முறையே 259, 216 கொரோனா தொற்று எண்ணிக்கையை கொண்டுள்ளன.
Advertisment
Advertisements
தொற்றுக்கு என்ன காரணம்: சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில்,"இந்த தெருவில் வசிக்கும் இரண்டு பேர், கொரோனா தொடர்பான தன்னார்வ பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இப்பகுதி மக்களுக்கு தேனீர், சாப்பாடு போன்ற உதவிகளை செய்து வந்துள்ளனர் . அவர்கள் இரண்டு பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் மூலம் இந்த தெரு மக்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
அந்த இரண்டு நபர்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாக கூறிய அதிகாரி, இவர்களுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது. இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் யார்? போன்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில், கொரோனா பாதிப்புக்கு நேற்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil