Chennai Trains : சென்னையில் மின்சார ரயில்களை பொறுத்தவரை சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய 4 மார்க்கங்களில் இயக்கப்படுகின்றன.
இந்த நூற்றுக்கணக்கான ரயில்கள் தினம்தோறும் இயக்கப்படுகின்றன. வருகிறது. பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் பயணிகள் என அனைவரும் இந்த ரயில்களில் பயணப்பட்டு வருகின்றனர்.
மேலும், விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்களை மின்சார ரயில்கள் இணைப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும்.
அதிகாலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் இதனை பயன்படுத்துவார்கள். இந்த நிலையில், அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த பணிகளால் பல ரயில்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) 14 ரயில்களும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 44 மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.35க்கு பட்டாபிராம் புறப்படும் ரயில், இரவு 11.30 மற்றும் 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரயில், மிலிட்டரி சைடிங்கில் ஆவடிக்கு இரவு 11.55க்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்கள்
இதற்கிடையில், பயணிகள் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1, 1.45, 2.15 மணிக்கு சிறப்பு ரயில்களும், காலை 9.40 , 10.20, 10.55, 11.30,மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் 44 மின்சார ரயில்கள் நாளை (அக்.8) ரத்து செய்யப்பட உள்ளன என்பது பயணிகளுக்கு அசவுகரியத்தை கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“