சென்னை கடற்கரை வழியாக கோடம்பாக்கம் பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மார்ச் 17) 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வழித் தடங்களில் காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“