17 வயது கல்லூரி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது

கடலூர் மாவட்டத்தில் 17 வயது கல்லூரி மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 45 வயது பெண் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 17 வயது கல்லூரி மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 45 வயது பெண் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tiruppur minor Girl sexual assault 9 arrested  arrested under POCSO Act Tamil News

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மாணவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், ராமநாதகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாயமான அந்த மாணவர் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் நிற்பதைக் கண்டனர். உடனடியாக இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருமணமான அந்தப் பெண்ணுக்கும் மாணவருக்கும் இடையே பழக்கம் இருந்ததும், அப்பெண் மாணவரை ஆசை வார்த்தைகள் கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த போலீஸார் அப்பெண் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரைச் சிறையில் அடைத்தனர்.

Advertisment
Advertisements

செய்தி: பாபு ராஜேந்திரன்

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: