Advertisment

தமிழகத்தில் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 46 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Police officers transferred

தமிழகம் முழுவதும் 46 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அதன் விபரம் வருமாறு.

1. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சப் டிவிஷன் ஏஎஸ்பி அரவிந்த் மேனன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, மதுரை என்போர்ஸ்மெண்ட் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சப்டிவிஷன் ஏஎஸ்பி எஸ்.சக்தி கணேசன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சப்டிவிஷன் ஏஎஸ்பி எஸ்.சர்வேஷ் ராஜ், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சப் டிவிஷன் ஏஎஸ்பி சுகுனா சிங், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருச்சி திருவெரும்பூர் சப் டிவிஷன் ஏஎஸ்பியாக பணியாற்றி சி.கலைசெல்வன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சென்னை மாதாவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சப் டிவிஷன் ஏஎஸ்பி டாக்டர் என். ஸ்ரீனிதா, எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சென்னை சிபிசிஐடி2 எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் பி.அரவிந்தன், சென்னை தி.நகர் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. தி.நகர் துணை கமிஷனராக இருந்த பி.சரவணன், மயிலாப்பூர் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9. சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி பி.சாமிநாதன், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

11. சென்னை மாதவரம் துணை கமிஷனராக இருந்த எஸ்.ராஜேந்திரன், கீழ்பாக்கம் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

12. கீழ்பாக்கம் துணை கமிஷனராக இருந்த ப்ரவேஷ் குமார், திருவல்லிக்கேணி துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13. திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த பி.பெருமாள், கோவை கிரைம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. சென்னை நில அபகரிப்பு எஸ்பி ஏ.ஜெயலட்சுமி, சென்னை மாநகர போலீஸ் நிர்வாக எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

15. சென்னை மாநகர போலீஸ் நிர்வாக பிரிவு துணை கமிஷனர் ராதிகா, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

16. லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருந்த சி.மகேஸ்வரி, சென்னை கிழக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இடமாற்றப்பட்டுள்ளார்.

17. சென்னை கிழக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் வி.சசி மோகன், மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. சென்னை மார்டன் கண்ட்ரோல் ரூம் துணை கமிஷனர் எம்.கிங்க்ஸ்லின், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.ஐ.சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

19. லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.ஐ.சி எஸ்பி டி.சண்முக பிரியா, சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

20. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக எஸ்பி, எஸ்.மல்லிகா, சென்னை சிட்டி கிரைம் பிராஞ்ச் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

21. சென்னை சிட்டி குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆர்.லலிதா லஷ்மி, பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

22. சென்னை கிரைம் பிராஞ்ச் எஸ்.ஐ.டி எஸ்.பி பி.விஜயகுமார், சென்னை மாநகர மார்டன் கண்ட்ரோல் ரூம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. நாகை கடலோர காவல்படை எஸ்பி, எம்.மனோகர், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பெட்டாலியன் கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

24. உளுந்தூர்பேட்டை கமெண்டெண்டாக இருந்த என்.பெருமாள், ராஜபாளையம் கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

25. ராஜபாளையம் கமெண்டெண்ட் வனிதா பாண்டே, ஆவடி கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

26. ஆவடி கமெண்டெண்டாக இருந்த பி.மகேந்திரன், தூத்துக்குடி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. திருச்சி மாநில போக்குவரத்து கார்பரேஷன் விஜிலென்ஸ் அதிகாரி பி.முத்தையா, தமிழ்நாடு காவலர் தேர்வு வாரியம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. தமிழ்நாடு போலீஸ் காவலர் தேர்வு வாரிய எஸ்பியாக இருந்த எம்.எஸ்.முத்துசாமி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

29. சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் பிஎஸ்சி கல்யாண், திருச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. திருச்சி எஸ்பியாக இருந்த டி.செந்தில்குமார், திருச்சி க்ரைம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

31. திருச்சி க்ரைம் மற்று போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த எஸ்.பிரபாகரன், திருப்பூர் தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

32. திருப்பூர் தலைமைய துணை கமிஷனர் ஆர்.சின்னசாமி, நாகை கடலோர காவல்படை எஸ்பியாக மாற்றாப்பட்டுள்ளார்.

33. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஈஸ்வரன், சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம்.

34. திருச்சி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த ஏ.மயில்வாகனன், மதுரை தலைமையக துணை கமிஷனராக மாற்றாப்பட்டுள்ளார்.

35. மதுரை போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் என்.மணிவண்ணன், மதுரை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

36. மதுரை டிஎஸ்பி கமெண்டெண்ட் கே.பாலாஜி, சென்னை சிறிய ஆயுதங்கள் கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

37. சென்னை சிறிய ஆயுதங்கள் கமெண்டெண்ட் எஸ்.சேகர், பழனி ஆயுதப்படை கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

38. பழனி ஆயுதப்படை கமெண்டெண்ட் கே.சண்முகம், மதுரை ஆயுதப்படை கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

39. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு 2 எஸ்பியாக இருந்த என்.காமினி, ஆவடி ஆயுதப்படை கமெண்டெண்ட்டாக மாற்றப்பட்டுள்ளார்.

40. ஆவடி ஆயுதப்படை கமெண்டெண்ட் பி.ரவிச்சந்திரன், போச்சம்பள்ளி ஆயுதப்படை கமெண்டெண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

41. கோவை தலைமையக துணை கமிஷனர் பா.மூர்த்தி, கோவை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

42. கோவை எஸ்பியாக இருந்த ஆர்.வி.ரம்யா பாரதி, பொருளாதார குற்றப்பிரிவு 2 எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

43. போச்சம்பள்ளி ஆயுதபடை கமெண்டெண்ட் ஜி.சுப்புலட்சுமி, சேலம் நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

44. சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த ஜியோரி ஜார், சென்னை ரெயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

45. சென்னை சிபிசிஐடி 2 எஸ்பி ஜி.நாகஜோதி, நில அபகரிப்பு செல் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

46. மதுரை நகர தலைமையக துணை கமிஷனர் எஸ்.செல்வராஜ், புதுக்கோடை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment