வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் இம்முறை திருநங்கைகள்/ பால்புதுமையினார் இலக்கியங்கள் மற்றும் அவர்களின் படைப்புக்களை மக்களிடம் கொண்டுசெல்ல பிரத்யேக ஸ்டால்கள் அமைக்குமாறு முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BookSellers and Publishers Association of South India (BAPASI)) ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள நந்தனம் YMCA மைதனாத்தில் 46-வது புத்தக் கண்காட்சி வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக LGBTQIA+ இலக்கியங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை அரங்கம் அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் திருநங்கையினர் படைப்புகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
'Queer Publishing House’ கடந்த வாரம் புத்தகக் கண்காட்சியில் அரங்கம் அமைக்க பா.ப.சி. நிர்வாகிகளிடம் அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளனர்.
அனுமதி உறுதிசெயப்படாததை எதிர்த்து பலரும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அனுமதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திருநர் உரிமைக்கூட்டமைப்பு கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
LGBTQIA+ இலக்கியங்கள் இடம்பெறும் அரங்கில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், பால்புதுமையினரின் படைப்புகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு முதன்முறையாக சென்னை புத்தகக் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெறுகிறது. ஜனவரி,16 ஆம் தேதி முதல் ஆம் 18 தேதி வரை ‘சர்வதேசக் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த சர்வதேச கண்காட்சிக்கு 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை 800 க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் ஜனவரி 6ஆம் தேதி இந்த புத்தக கண்காட்சி தொடங்க இருக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.