Advertisment

சர்வதேச விமான நிலையம் போல் மாறும் கன்னியாகுமரி ரயில் நிலையம்: ரூ.49.36 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி ரயில் நிலையம் சர்வதேச விமான நிலையம் போன்ற தோற்றத்தை பெற உள்ளது.

author-image
WebDesk
New Update
 Kanyakumari railway station works

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மேற்கோபுர தோற்றத்துடன், கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

திருவனந்தபுரம் கோட்ட தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இதில், “கன்னியாகுமரிக்கு தினம் வருகை தரும் உலக சுற்றுலா பயணிகளுடன், இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வசதியை மேம்படுத்த கன்னியாகுமரிக்கு தினசரி, வாரந்திர இரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மேற்கோபுர தோற்றத்துடன், கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் இடங்களில் மண் பரிசோதனைகள் முடிவு பெற்று பணிகள் தொடங்கி விட்டன.

இந்தப் பணிகள் அனைத்தும் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், “கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி என்பதால் நாகர்கோவில் சென்ட்ரல் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரும் அனைத்து தொலைத்தூர இரொயில்களும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் ” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kanyakumari Southern Railway Vijay Vasanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment