திருச்சி சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி காஜாமலை விஜய், முத்து செல்வம், அந்த நல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், திமுக நிர்வாகி திருப்பதி உள்ளிட்ட ஐந்து பேர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 15) மாலை ஆஜர் படுத்தப்பட்டனர்.
முன்னதாக, அமைச்சர் கே.என் நேரு இன்று காலை திருச்சி கன்டோன்மென்ட் அருகில் உள்ள ஸ்டேட் பேங்கர்ஸ் காலனியில் இறகு பந்து மைதானத்தை திறக்கச் சென்றார். இதே நேரம் அந்த பகுதியிலேயே வசிக்கும் திருச்சி சிவா எம்பியின் பெயரை பூங்கா சிறப்பு கல்வெட்டிலும் போஸ்டரிலும் போடவில்லை என அவரது தரப்பினர் அமைச்சர் கே என் நேருவுக்கு கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்பியின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திலையும் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/