scorecardresearch

Ooty Car Accident : ஊட்டி அருகே நடந்த கோர விபத்தில் 5 பேர் பலி!

Five Chennai Tourists Dies as Car Falls into Ooty Gorge : காருக்குள் இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

Ooty Car Accident
Ooty Car Accident

5 Tourist Killed in Ooty as Car Falls into 250 Feet Gorge : ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது மாயமான தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர் ஊட்டியில் நடந்த கோர விபத்தில் சிக்கின. இதில் சம்பவ இடத்திலியே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜூட் ஆண்டோ சென்னையை சேர்ந்த கல்லூரி நண்பர்கள் ஆறு பேருடன் காரில் ஊட்டிக்கு கடந்த 30-ம் தேதி சுற்றுலா சென்றனர். அங்கு தனியார் விடுதியில் தங்கிய அவர்கள் 3-ம் தேதி அறையை காலி செய்தனர்.

திங்கள் கிழமை காலை விடுதியில் இருந்து புறப்பட்ட அவர்கள் புதன் கிழமை வரை விடுதிக்கு திரும்பவில்லை.2 நாட்களாகியும் மீண்டும் விடுதிக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Ooty Car Accident : 250 அடி பள்ளத்தில் சிக்கிய கார்!

இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.  இந்நிலையில் கல்லட்டி அருகே 35 ஆவது கொண்டை ஊசி வளைவில் 300 அடி பள்ளத்தில் கார் ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்தறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பள்ளத்தில் இறங்கி பார்த்துள்ளனர். அப்போது காரின் கதவு திறக்க முடியாதபடி நசுங்கி கிடந்துள்ளது. கடப்பாறையின் உதவியுடன் கார் கதவை உடைத்து பார்த்த போது ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், காருக்குள் இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

 

அவர்களை மீட்ட காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ரவி வர்மா, ஜெயக்குமார், அமர்நாத், இப்ராகிம், ஜூட் ஆன்ட்டோ என்பதும், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ராமராஜேஸ் மற்றும் அருண் என்பதும் தெரியவந்தது.

உயிரிழந்த ஜூட் ஆண்டோ கப்பலில் கேப்டனாக பணியாற்றி வந்துள்ளார்.  சுற்றுலா சென்ற இடத்தில் இப்படி ஒரு கோரமான விபத்து நடந்திருப்பது அவர்களின் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 5 chennai tourists killed ooty car falls

Best of Express