Advertisment

வால்பாறை : சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் இரு சக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வால்பாறையில் உள்ள ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
Oct 20, 2023 20:01 IST
New Update
5 college students Valparai drowned in the river

கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் இரு சக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மேற்கு மலை தொடர்ச்சி பகுதியான வால்பாறை என்பது ஒரு சுற்றுலாத் தலமாகும். இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் இரு சக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் வால்பாறை அடுத்துள்ள சொலையார் ஆர்ச் அருகே ஆற்றில் குளித்துள்ளனர்.அப்போது ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றதால் 5 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். 

இது குறித்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய 3 பேர் உடலை மீட்டுள்ளனர்.

2 மாணவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment