scorecardresearch

5 மாவட்டப் பள்ளிகள் மட்டும் மார்ச் 4-ம் தேதி செயல்படும்: முதல்வர் ஆய்வு

5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டப் பள்ளிகள் மட்டும் மார்ச் 4-ம் தேதி செயல்படும்: முதல்வர் ஆய்வு

தமிழகத்தில் உள்ள மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளார்.

ஆகையால் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அன்றைய தினம், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை அட்டவணைப்படி இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்றும், அதற்குப் பதிலாக 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 5 district schools in tamil nadu will function on march 4th