Advertisment

தமிழகத்தில் 5 இடங்களில் புதிய தொழில் பூங்கா: ரூ 1500 கோடியில் பணிகள் தீவிரம்

5 more industrial parks எதிர்பார்த்த தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மணலூர் பூங்கா, குறிப்பிட்ட தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 more industrial parks at rs 1500 crores in Tamilnadu Tamil News

5 more industrial parks at Rs 1500 crores

5 more Industrial Parks Tamil News : சென்னை புறநகரில் உள்ள மணலூரில் ஒரு பிரத்தியேக இ-வாகன பூங்காவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் நான்கு தொழில்துறை பூங்காக்களையும் உருவாக்கத் தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) தயாராக உள்ளது.

Advertisment

3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் ரூ.1,536 கோடி செலவில் திருவள்ளூர் மாவட்டத்தின் மணலூரில் தொழில்துறை பூங்காக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லம் வடகல் (கட்டம் -2) மற்றும் ஓரகதம் (கட்டம் -2), திருச்சியில் மணப்பாறை மற்றும் திண்டிவனம் வில்லுபுரத்திலும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. "நாங்கள் தேவையான குடிமை உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். வெவ்வேறு கட்டங்களில் அதற்கான பணிகள் உள்ளன" என்று சிப்காட் நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன் கூறினார். புதிய தொழில்துறை பூங்காக்கள் தற்போதுள்ள 21 பூங்காக்களிலிருந்து சிப்காட் தொழில்துறை பூங்காக்களின் எண்ணிக்கையை 26-ஆகக் கொண்டு செல்லும். அவை வரவிருக்கும் தொழில்துறை பூங்காக்களிலும் அதைச் சுற்றியும் வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும், பிராந்தியத்தின் சமூக-பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

691 ஏக்கர் பரப்பளவில் வரவிருக்கும் மணலூர் தொழில்துறை பூங்கா மின் வாகனம் மற்றும் அதன் கூறு உற்பத்தித் தொழில்களை நிறுவுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்த மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கு (போக்குவரத்து அல்லாத வாகனங்கள்) 100% வரியையும் விலக்கு அளித்துள்ளது. எதிர்பார்த்த தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மணலூர் பூங்கா, குறிப்பிட்ட தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அருகிலுள்ள இளைஞர்களுக்கு மின்-வாகனம் மற்றும் வாகன பாகங்கள் தொடர்பான பயிற்சி அளிப்பதற்கான திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும். இது ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும். எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிகல் பாகங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளிங் தொழில்கள் மணலூரில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இது தவிர, ஆட்டோமொபைல் சார்ந்த தொழில்கள் இங்கு வரும். செயற்கை கரிம வேதிப்பொருட்கள் மற்றும் ஒருங்கிணைந்த வண்ணப்பூச்சுத் தொழில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களும் பூங்காவில் வரும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Industrial Parks
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment