தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதியதாக 5 உறுப்பினர்களை நியமிக்க கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு புதிய உறுப்பினர்களாக சரவணக் குமார், தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் மற்றும் சிவக்குமார் ஆகிய 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடுத்த 6 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தம் 14 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள்.
ஆனால் கடந்த காலங்களில் 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் தலைவர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதல் அவசியம்.
முன்னதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பில் சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழ்நாடு அரசு முயற்சிகள் செய்தது.
ஆனால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் புதிதாக 5 உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அடுத்த 6 ஆண்டுகள் அல்லது 62 வயதுவரை பதவியில் நீடிப்பார்கள். வரும் நாள்களில் மீதமுள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பை முனியநாதன் கூடுதலாக கவனித்துவருகிறார். இதற்கிடையில் தலைவர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“