Chennai Tamil News: சென்னையில் உள்ள அண்ணா சாலையில் பைக் வீலிங் செய்து சாலை விதிகளை மீறிய ஐந்து இளைஞர்களை காவல் துறை கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து பிரபலமாவதற்காக, சென்னை தேனாம்பேட்டையில் இருந்து அண்ணா சாலையில் அமர்ந்திருக்கும் பாலம் வரை இளைஞர்கள் பைக் வீலிங் செய்துகொண்டிருந்தனர்.

சென்ற வாரம் வியாழக்கிழமை எடுத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பிறகு, நெட்டிசன்கள் சென்னை காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து, பைக் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதன்பிறகு, சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கைது செய்தனர்.
ஆம்பூரைச் சேர்ந்த ஹாரிஸ் (வயது 19), ஷாபான் (வயது 19) ஆகிய இரு கல்லூரி மாணவர்களை சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், இம்ரான் (வயது 20), மாலிக் (வயது 19) மற்றும் முகேஷ் (வயது 20) ஆகிய மூன்று பேரை (ஞாயிற்றுக்கிழமை) நேற்று காவல்துறை கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான குற்றவாளி, பினோஸ் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரைப் பிடிக்க ஹைதராபாதிற்கு சிறப்புக் குழுவுடன் காவல்துறை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil