/indian-express-tamil/media/media_files/ceZjQ3O4Q5FDAtMRcz6i.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் ஒரு கார் நேற்று முதல் நின்றிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் இன்று (செப்.25) காலை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்ததில், காருக்குள் ஐந்து பேர் சடலமாக இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக, தடயவில் மற்றும் மருத்துவ நிபுணர்களை வரவழைத்தனர்.
காரின் பதிவு எண்ணை வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அவர்களது உடல்கள் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கார் பதிவு எண் படி உயிரிழந்த ஐவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.