சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் மேலும், “இந்த நிலையில், கணேசபுரம், கெங்கு ரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், மவுண்ட், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், சிபி சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், ஆர்பிஐ சுரங்கபாதை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, சூளைமேடு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதுவரை 37 இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
5 உயிரிழப்புகள்
- திருவான்மியூர் பெசண்ட் நகரில் முருகன் (35) என்பவர் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்தார்.
- பட்டினப்பாக்கம் மாநகர டிப்போ அருகில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
- துரைப்பாக்கம் பாண்டியன் நகரில் துரைப்பாக்கத்தை சேர்ந்த கணேசன என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
- புதுவண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே 70 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
- எஸ்பிளனேடு லோன் ஸ்கொயர் சாலை அருகே திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“