scorecardresearch

பா.ஜ.க.வில் இருந்து 5 பேர் நீக்கம்.. அண்ணாமலை அதிரடி நடவடிக்கை

பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதாக 5 நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

5 people suspended from Tamil Nadu Bharatiya Janata Party
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜன.29ஆம் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்ட, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சசிதரன், பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கூறிய 5 பேருடன் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் 5 பேர் நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 5 people suspended from tamil nadu bharatiya janata party