Advertisment

அ.தி.மு.க- தே.மு.தி.க ராசியான கூட்டணி; பிரேமலதா விஜயகாந்த்

அ.தி.மு.க., தே.மு.தி.க. ராசியான கூட்டணி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
5 seats have been allotted to DMK in AIADMK alliance

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Advertisment

இந்த நிலையில் அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தே.மு.தி.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை (மார்ச் 20, 2024) ஒப்பந்தமானது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடரும்; அ.தி.மு.க, தே.மு.தி.க ஒரு ராசியான கூட்டணி.

கூட்டணியை பொறுத்தவரை எண்ணிக்கை என்பது முக்கியம் இல்லை; யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 2011ஆம் ஆண்டைப் போல் மீண்டும் வரலாறு படைப்போம். வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

அ.தி.மு.க கூட்டணியல் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Premalatha Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment