வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதோடு வடகிழக்குப் பருவமழையும் தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், அதையொட்டி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்தது. இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக சாலை, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். எனினும் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். சாலை, சுரங்கப் பாதைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, சி.பி சாலை சுரங்கப்பாதை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், எம்.ஆர்.டி.எஸ் சுரங்கப்பாதைகளில் ஆகிய 5 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“